000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திரிபுராந்தகர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a முப்புரம் எரிக்க விழையும் முக்கண்ணர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a மாறுபடு சூரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அழிக்க சிவனார் வெகுண்டெழும் காட்சி. நான்முகனும், திருமாலும் சிவனாரை சாந்தப்படுத்த முயலுகின்றனர். திருமால் தன் வலது கையை சடையாரின் வலது மார்பில் வைத்தும், இடது கையால் ஓங்கி ஆயுதமெரிய முனிந்திருக்கும் சிவபெருமானின் வலதுகையை தடுத்தும் கொண்டிருக்கிறார். நான்முகன் வலது கையில் வியப்பு முத்திரைக் காட்டியபடியும் இடது கையால் பொறுமை காக்க வேண்டியும் நிற்கிறார். மேலே கணங்கள் போற்றி பாடுகின்றன. அரையாடை அணிந்துள்ள முக்கண்ணரின் ஜடாபாரம் நீண்டு உயர்ந்து விளங்குகின்றது. நெற்றிப்பட்டை அணிந்துள்ளார். சிவனாருக்கு இரு கைகளே தெரிகின்றன. வலது கையை ஓங்கியபடி ஆயுதங்கொண்டுள்ளார். இடது கை எச்சரிக்கை முத்திரை காட்டுகிறது. கழுத்தில் கண்டிகை அழகு செய்கின்றன. அரையாடை அணிந்துள்ள பெருமானின் இடையாடை முன்புறம் தொங்குகின்றது. முப்புரிநூல் வலது தொடையின் வழியாக உடலின் பின்புறம் செல்கிறது. |
653 | : | _ _ |a திரிபுராந்தகர், மூவெயில் எரித்தபிரான், முப்புரமெரித்தவர், இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000045 |
barcode | : | TVA_SCL_000045 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |